அகத்திணையியல்-நூற்பா-96,97 239
இஃது இருவகைப் பாங்கருள் பார்ப்பனப் பாங்கற்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது.
இ-ள் இளமை முதலாயினவும் அவைபோல்வன பிறவும் நிலையாத இயல்பின் நிலைமையை எடுத்துக்கூறலும், செலவு அழுங்குவித்தலும், செலவு உடன்படுத்தலும், பிறவும் எல்லாம் பார்ப்பனப் பாங்கற்கு உரியவையாம் என்றவாறு.96
ஒத்த நூற்பாக்கள்
"காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும் கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும் மாவொடு பட்ட நிமித்தம் கூறலும் செலவுறு கிளவியும் செலவுஅழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய". தொல். பொ. 177 "மொழிஎதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே". " 182 "குறித்துஎதிர் மொழிதல் அஃகித் தோன்றும்". " 183 முழுதும்- ந. அ. 100 96
வேளாளப்பாங்கன் தொழில்
469 நன்மையின் நிறுத்தலும் தீமையின் அகற்றலும் சொன்னவை பிறவும் சூத்திரற்கு உரிய.
இது சூத்திரப்பாங்கற்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது.
இ-ள் நன்மையின் நிறுத்தலும், தீமையின் விலக்கலும், மேற்கூறிப்போந்த பிறவும் சூத்திரப்பாங்கற்கு உரியனவாம் என்றவாறு.
சொன்னவையும் பிறவும் என்க. பிறவாவன வாயில் வேண்டல் முதலாயின. 97