அகத்திணையியல்-நூற்பா-98,100 241
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்- ந. அ. 102 98
பாங்கி தொழில்கள்
471 பிரிவுழி விலக்கலும் பிரிவுஉடன் படுத்தலும் பிரிவுழித் தேற்றலும் பிரிவுழி அழுங்கலும் பிறவும் உரிய இறைவளைப் பாங்கிக்கு.
இது பாங்கிக்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது.
இ-ள் பிரிவுழிக்கலங்கல் முதலாகச் சொல்லப்பட்டனவும் பிறவும் எல்லாம் பாங்கிக்கு உரியனவாம் என்றவாறு. பிற ஆவன வாயில்வேண்டல் முதலாயின.99
விளக்கம்
தலைவிநலன் குறித்த எல்லாச் செயல்களும் தோழிக்கே முதற்கண உரியன என்பது.
முழுதும்- ந. அ 103 99
செவிலி - அறிவர் - தொழில்கள்
472 முன்வரு நீதியும் முயங்கியல் முறையும் பின்வரும் பெற்றியும் பிறவும் எல்லாம் தெற்றெனக் கூறல் செவிலித் தாய்க்கும் உற்ற அறிவர்க்கும் உரிய ஆகும்.
இது செவிலித்தாய்க்கும் அறிவர்க்கும் உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது. 31