இல்லற நெறிமுறை, தலைவியைக் கூடுதற்குரிய நன்னாட்கள், அதனால் பின்னர் இல்வாழ்க்கை சிறக்கும் பெற்றி-முதலியகூறல், வாயில்வேண்டல் ஆகிய பலவும் செவிலித்தாய்க்கும் அறிவர்க்கும் உரியவாம் என்றவாறு.
ஒத்த நூற்பாக்கள்
"கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக்கு உரிய ஆகும் என்ப". தொல். பொ. 153
"செவிலி கிளவி அறிவர்க்கும் உரிய". " 154
"இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும் கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின்" " 155
"வருத்தம் மிகுதி சுட்டுங் காலை உரித்துஎன மொழிப வாழ்க்கையுள் இரக்கம்". " 226