அகத்திணையியல்-நூற்பா-101,102                           243


 

     இ-ள் குடிப்பிறந்தோரை வடுப்படுத்து உரைத்தல் முதலாகச்
 சொல்லப்பட்டன எல்லாம் காமக்கிழத்தியருக்கு உரியனவாம் என்றவாறு.  101

விளக்கம்

     நற்குடிமகளிரைக் குறைகூறுதலும், தலைவியைப் பழித்தலும், தலைவி
 ஊடல்கேட்டு அவளை இடித்து உரைத்தலும், மனைவிக்கு அமைந்த
 நற்பண்புகள் கோடலும் காமக்கிழத்தியர்க்கு உரியனவாம்.

ஒத்த நூற்பாக்கள்

     "புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்
     இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும்
     பல்வேறு புதல்வர்க் கண்டுநனி உவப்பினும்
     மறையின் தந்த மனையோள் செய்வினை
     பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்
     காதல் சோர்வின் கடப்பாடு ஆண்மையின்
     தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக்
     காய்வின்று அவன்வயின் பொருத்தற் கண்ணும்
     இன்னகைப் புதல்வனைத் தழீஇ இழைஅணிந்து
     பின்னர் வந்த வாயிற் கண்ணும்
     மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்
     மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும்
     எண்ணிய பண்ணைஎன்று இவற்றொடு பிறவும்
     கண்ணிய காமக் கிழத்தியர் மேன".              தொல். பொ. 151

     முழுதும்-                                          ந. அ. 105

101

பரத்தையர் தொழில்

 474 கிழவோன் தன்னையும் கிழத்தி தன்னையும்
     இகழ்தலும் தம்மைப் புகழ்தலும் நிகழ்பொருள்
     காத்தலும் பரத்தையர் கடன்என மொழிப.