244 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
இது பரத்தையர்க்கு உரியன எல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது.
இ-ள் தலைமகனையும் தலைமகளையும் இகழ்தல் முதலாகச் சொல்லப்பட்டன எல்லாம் பரத்தையர் முறைமை என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
இவற்றுள், கிழவோற் பழித்தலுக்குச் செய்யுள்:
கோடலஞ் செங்கைநல் லார்கொங்கை ஏற்றமென் கொங்கினுடன் பாடலங் காவும் பருமணல் குன்றும் பயின்று நம்பால் ஆடலும் பாடலுங் கண்டுங்கொண் டாடுவ தன்றியன்பின் ஊடலும் கூடலும் உண்டுகொல்லோ பொய்கை ஊரனுக்கே. அம்பி. 482
எனவும், தலைவியை இகழ்தற்குச் செய்யுள்:
தேமே குவளையுஞ் செந்நெலுங் கன்னலுஞ் சேரநன்னர் ஆமேய் கழனி அகன்புனல் ஊரன் அகலமெல்லாம் யாமே விரும்பினம் என்றெம்மை ஏசுவர்போலத் தம்மைத் தாமே பழிப்பர் தலைவியர் தாமும் தனம்படைத்தே.
எனவும், பரத்தையர் தம்மைப் புகழ்தற்குச் செய்யுள்:
அரியார் விழிவஞ்சி ஆயமும் தானும் அகன்துறைவாய் விரியார் நறுந்தொடை மன்புறம் காப்பினும் என்புறமே புரியா தொழிகுவ னேலழி யாத புகழ்படையாக் கரியார் திருவில் தரியாது உடைகஎன் கைச்சங்கமே. அம்பி. 476
எனவும் வரும். நிகழ்பொருள்காத்தற்கு உதாரணம் வந்துழிக் காண்க 102