அகத்திணையியல்-நூற்பா-105,106 247
பாங்கர் இயல்
477 இருவகைப் பாங்கரும் ஒருபெருங் குரிசிற்கு இன்னுயிர்த் துணையாய் இருபெருங் குரவரும் தம்வசப் படுத்த தன்மை யோரே.
இது பாங்கர் ஆவார் இவர் என்கின்றது.
இ-ள் பார்ப்பனப் பாங்கரும் சூத்திரப் பாங்கரும் எனும் இருதிறத்தோரும், தலைமகற்கு இனிய உயிர்த்துணையாக அவன்தாயும் தந்தையும் அவனை அடைக்கலமாகக் கொடுக்கப்பட்ட தன்மையோர் என்றவாறு. 105
விளக்கம்
இருமுது குரவராலும் "இவனை எம்போலக் கொண்டு ஒழுகு" என்று தலைமகற்குக் காட்டிக் கொடுக்கப்பட்டான் பாங்கன் என்பதூஉம், "நீயும் எம்போலத் தீயன கண்டு பண்பான இடத்து அடக்குவாயாக" என்று பாங்கற்குக் காட்டிக் கொடுக்கப்பட்டான் தலைவன் என்பதூஉம் கொள்க. இறை. கள. 3 உரை.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - ந. அ. 109
105
தோழி இயல்
478 தோழி செவிலி மகளாய்ச் சூழ்தலோடு உசாத்துணை ஆகி அசாத்தணி வித்தற்கு உரிய காதல் மருவிய துணையே.
இது தோழி ஆவாள் இவள் என்கின்றது.
இ-ள் தோழி என்பாள் செவிலிக்கு மகளாய் நன்மையும் தீமையும் ஆராய்தலுடனே தலைமகட்கு உசாத்துணையாய் அவளது வருத்தம் தீர்த்தற்கு உரிய அன்புபொருந்திய துணையாம் என்றவாறு. 106