248 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
ஒத்த நூற்பாக்கள்
"தோழி தானே செவிலி மகளே." தொல். பொ. 125 "சூழ்தலும் உசாத்துணை நிலைமையின் பொலிமே." 126 "உறுகண் ஓம்பல் தன்இயல்பு ஆகலின் உரியது ஆகும் தோழிகண் உரனே." 239 "உயர்மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே." 240 "வாயில் கிளவி வெளிப்படக் கிளத்தல் தாவின்று உரிய தத்தம் கூற்றே." 241 முழுதும் - ந. அ. 110
106
செவிலி இயல்
479 செவிலி நற்றாய் தோழி ஆகி அவலம் நீக்கி அறிவும்ஆ சாரமும் கொளுத்தித் தலைவியை வளர்த்த தாயே.
இது செவிலி ஆவாள் இவள் என்கின்றது.
இ-ள் செவிலி என்பாள் தலைமகளுடைய நற்றாய்க்குத் தோழியாய்த் தலைமகட்கு வரும் குற்றங்களைக் களைந்து நல்லறிவும் ஆசாரமும் கொளுத்தித் தலைமகளை வளர்த்த தாய் என்றவாறு. 107
"ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய்எனப் படுவோள் செவிலி ஆகும்." தொல். பொ. 124 முழுதும்- ந. அ. 111 107
அறிவர் இயல்
480 அறிவர் கிழவோன் கிழத்திஎன்று இருவர்க்கும் உறுதி மொழிந்த ஒருபெருங் குரவர்.