அகத்திணையியல்-நூற்பா-108,109 249
இஃது அறிவர் ஆவார் இவர் என்கின்றது.
இ-ள் அறிவர் என்பார் தலைமகற்கும் தலைமகட்கும் உறுதியைப் பயக்கும் உபதேசங்களைத் சொன்ன மேம்பட்ட குரவர் ஆவார் என்றவாறு.108
விளக்கம்
"மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியின் ஆற்றிய அறிவர்" எனவே அவரே குரவர் ஆதற்கு உரியார் என்பதாம்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்- ந. அ. 112
108
காமக்கிழத்தியர் இயல்
481 ஒருவன் தனக்கே உரிமை பூண்டு வருகுலப் பரத்தையர் மகளிர் ஆகிக் காமக்கு வரைந்தோர் காமக் கிழத்தியர்.
இது காமக்கிழத்தியர் ஆவார் இவர் என்கின்றது.
இ-ள் காமக்கிழத்தியர் என்பார் சேரிப்பரத்தையர் போலப் பலருக்கும் உரியர்அன்றி, ஒருவற்கே உரிமைபூண்டு வருகுலப் பரத்தையர் மகளிர்ஆகி, காமம் காரணமாகத் தலைமகனால் வரைந்து கொள்ளப்பட்டார் என்றவாறு.109
முழுதும்- ந. அ. 113
109
காதற் பரத்தையர் இயல்
482 யாரையும் நயவா இயல்பில் சிறந்த சேரிப் பரத்தையர் மகளிர் ஆகிக் காதலில் புணர்வோர் காதல் பரத்தையர்.
32