250 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்
இது காதல் பரத்தையர் ஆவார் இவர் என்கின்றது.
இ-ள் காதல் பரத்தையர் என்பார் யாரையும் விரும்பாத இயல்பினான்மிக்க சேரிப் பரத்தையருடைய மகளிராய்த் தம் விருப்பினால் தலைமகனோடு கூடுவார் என்றவாறு. 110
விளக்கம்
பொருளை அன்றிப் பொருள்தருவாரைச் சேரிப்பரத்தையர் மனம் ஒன்றி விரும்பார் என்பதாம். சேரிப்பரத்தையர் மரபில் சிறந்தாள் தலைவற்குக் காமப்பரத்தை ஆவாள்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்- ந. அ. 114
110
காதற்பரத்தையர் சிறப்பியல்
483 அவருளும் வரைதற்கு உரியோர் உளரே.
இது பரத்தையர்க்கு உரியதொரு சிறப்பு உணர்த்துகின்றது.
இ-ள் காதல் பரத்தையருள்ளும் உளர் தலைமகனால் வரைந்து கோடற்கு உரியர் என்றவாறு. 111
எனவே, எல்லாக் காதற்பரத்தையரும் மணம்செய்து கோடற்கு ஏற்றவர் அல்லர் என்பதாம்.
கோவலற்கு அமைந்த மாதவி போல்வார் சிலரே என்பது.
முழுதும்- ந. அ. 115 111