அகத்திணையியல்-நூற்பா-112                              251


 

துறவறம்காக்கும் காலம்

 484 மக்களொடு மகிழ்ந்து மனைஅறம் காத்து
     மிக்க காம வேட்கை தீர்ந்துழித்
     தலைவனும் தலைவியும் தம்பதி நீங்கித்
     தொலைவுஇல் சுற்றமொடு துறவறம் காப்ப.

     இது தலைவனும் தலைவியும் துறவறம் காக்கும் காலம் உணர்த்துகின்றது.

     இ-ள் மக்களொடு மகிழ்ந்து இல்லறத்தினைக் காத்துத் தமக்குப்
 பொருந்திய காமவேட்கை எல்லாம் தீர்ந்த காலத்துத் தலைமகனும்
 தலைமகளும் தம் ஊரின் நீங்கி வனத்தின் கண் சென்று எல்லைஇல்லாச்
 சுற்றத்தாரோடும் துறவறம் காப்பர் என்றவாறு.                       112

விளக்கம்

 தலைவன் மனைவியோடு இருந்தே போகம் எல்லாம் துறந்து
 அனைத்துயிர்க்கும் செய்ய ஒண்ணாப் பெருந்தவங்கள் மிகப்புரிதற்கும்
 உரியனாம் என்பது. எனவே, இல்லறத்தான் வானப்பிரத்தனாய்ப் பின்
 துறவியாய் வீடுபேற்றின்கண் முயறலே வாழ்க்கையின் முடிந்த முடிபு
 என்பதாம்.

ஒத்த நூற்பாக்கள்

     "காமம் சான்ற கடைக்கோட் காலை
     ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
     அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
     சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.           தொல். பொ. 192
     இதனை "அருளொடு புணர்ந்த அகற்சியானும்"

 எனவும்,

     "காமம் நீத்த பாலினாலும்"

 எனவும்,