களவியற் செய்தி


 

களவு எனப்படுவது 

 485 அன்பின் ஐந்திணைக் களவுஎனப் படுவது
     அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள்
     கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்.

     மேல் கூறிப்போந்த கைகோள் இரண்டனையும் விரித்து உணர்த்துவான்
 தொடங்கினவற்றுள், இது நிறுத்தமுறையானே களவு என்னும் கைகோளது
 இலக்கணம் உணர்த்துகின்றது.

     இ-ள் அன்பினானாய ஐந்திணையுள் களவு எனப்பட்ட
 கைகோளாவது, பார்ப்பாரது அரிய நூலிடத்து மகட்கோடலாறு எட்டனுள்
 கந்தருவநெறியோடு ஒப்பது என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு.

 அன்பாவது-

     அடுமரம் துஞ்சுதோள் ஆடவரும் ஆய்ந்த
     படுமணிப் பைம்பூ ணவரும்-தடுமாறிக்
     கண்ணெதிர்நோக்கு ஒத்துஅவண் காரிகையில் கைகலத்து
     உள்நெகிழச் சேர்வதாம் அன்பு.
              தொல். பொ. 92 ந.

 என்பதனான் அறிக

     பிறர்க்கு உரியபொருள் என்று இருமுதுகுரவர் கொடை எதிர்ந்த
 தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவரும் கரந்த உள்ளத்தொடு
 எதிர்ப்பட்டுப் புணர்ந்த களவுஆதலின்  பிறருக்கு உரியபொருளை மறையில்
 கொண்டு கைகுறைக்கவும் கால்குறைக்கவும்  கழுஏற்றவும் பட்டுப் பழியும்
 பாவமும் ஆக்கி நரகத்தின் உய்க்கும் ஏனை உலகத்துக் களவுபோலாது,
 இது மேன்மக்களானும் புகழப்பட்டு ஞானஒழுக்கத்தோடு.