254                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     ஒத்த இயல்பிற்றாய்த் துறக்கவீடுகளை முடிக்கும் என்பார் அச்சிறப்புத்
 தோன்றக் "களவு  எனப்படுவது" என்றார்; பிற ஊரினும் சிறந்தது இவ்வூர்
 என்பார், "ஊர் எனப்படுவது உறையூர்"  என்றாற்போல. அதனானே,
 ஈண்டுக் களவு என்றது வேதத்தை மறைநூல் என்றதுபோல நின்றது
 ஆயிற்று.

     வேதமாவன இருக்கு முதலியனவாம்.

     மன்றல் எட்டாவன, பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம்
 காந்தருவம் அசுரம் இராக்கதம் பைசாசம் என்பனவாம்;

     அறநிலை ஒப்பே பொருள்கோள் தெய்வம்
     யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே
     இராக்கதம் பேய்நிலை என்றுஇக் கூறிய
     மறையோர் மன்றல் எட்டுஇவை அவற்றுள்
     துறைஅமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்புஇதன்
     பொருண்மை என்மனார் புலமையோரே.            இறை.1உரைந.

 என்ப ஆகலின்.

     அவற்றுள் பிரமமாவது - ஒத்த கோத்திரத்தானாய், நாற்பத்தெட்டு
 யாண்டுபிரமசரியம் காத்தாற்குப் பன்னீராட்டைப் பிராயத்தாளாய்ப் பூப்பு
 எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு  எய்தாமை அணிகலன்
 அணிந்து தானமாகக் கொடுப்பது,

     கயல்ஏர் மலர்உண்கண் கன்னிப்பூப்பு எய்தி
     அயல்பேர் அணிகலன்கள் சேர்த்தி-இயலின்
     நிரல்ஒத்த அத்தணற்கு நீரல் கொடுப்பதே
     பிரமமணம் என்னும் பெயர்த்து.              தொல். பொ. 92 ந.

 என்ப ஆகலின்.

     [கன்னி பூப்பு எய்திப் போகத்துக்கு உரியாள்ஆக, அவளுக்கு
 அணிகலன்கள் அணிவித்து,  மறைமொழிந்த ஆற்றானே,