அகத்திணையியல்-நூற்பா-113                              255


 

 மகட்கோடற்கு ஏற்றவனாகிய அந்தணனுக்கு நீர் வார்த்து அவளைத்
 தானம் செய்து  கொடுக்கும் மணம் பிரமமணம் ஆகும். இதனை அறநிலை
 என்று கூறுவர்.]

     பிரசாபத்தியமாவது-மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த
 பரிசத்து இரட்டித் தம்  மகட்கு ஈந்து கொடுப்பது;

     அரிமலர் உண்கண் ஆயிழை எய்துதற்கு
     உரியவன் கொடுத்த ஒண்பொருள் இரட்டி
     திருவின் தந்தை திண்ணிதின் சேர்த்தி
     அரியதன் கிளையோடு அமைவரக் கொடுத்தல்
     பிரிதல் இல்லாப் பிரசா பத்தியம்             தொல். பொ. 92 ந.

 என்ப ஆகலின்.

     [தன்மகளை மணம்செய்துகோடற்கு உரிய உறவினன் கொடுத்த
 பரிசத்தைப்போன்று  இருமடங்குப் பொருளைப் பெண்ணின் தந்தை
 மகிழ்ச்சியோடு வழங்கித் தன் உறவினர் சூழ  முறைப்படி மணம்செய்து
 கொடுப்பதே பிரசாபத்தியம். இஃது ஒப்பு எனவும் படும்.]

     ஆரிடமாவது-தக்கோன் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப்
 பொற்குளம்பினவாகச்  செய்து, அவற்றிடை நிறீஇப் பொன்அணிந்து நீரும்
 இவை போலப்  பொலிந்து வாழ்வீர் என  நீரில் கொடுப்பது;

     தனக்குஒத்த ஒண்பொருள் தன்மகளைச் சேர்த்தி
     மனைக்குஒத்த மாண்புஉடையாற் பேணி-இனக்குஒத்த
     ஈரிடத்து ஆவை நிறீஇ, இடை ஈவதே
     ஆரிடத்தார் கண்ட மணம்.                  தொல். பொ. 92 ந.

  என்ப ஆகலின்.

     [தன் தகுதிக்கு ஏற்பத் தன்மகளுக்கு வரிசைகள் நல்கித் தகுதியான்
 ஏற்றவனை  மணமகனாகத் தேர்ந்து, ஆவினுக்கும் ஆனேற்றினுக்கும்
 இடையே தன்மகளையும் மருமகன்  ஆகற்