256                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 பாலனையும் நிறுத்தி அவனுக்குத் தன்மகளை நீர்வார்த்துத் தானம்
 செய்து கொடுப்பதே  ஆரிட மணம் ஆகும். இது பொருள்கோள்
 எனவும்படும்.]

     தெய்வமாவது-பெருவேள்வி வேட்பிக்கின்றார் பலருள் ஒத்த ஒருவற்கு
 அவ்வேள்வித் தீ  முன்னர்த் தக்கிணையாகத் கொடுப்பது;

     நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த
     வேள்வி விளங்கழல் முன்நிறீஇக் - கேள்வியால்
     கைவைத்தாம் பூணாளைக் காமுற்றாற்கு ஈவதே
     தெய்வ மணத்தார் திறம்                     தொல். பொ. 92 ந.

 என்ப ஆகலின்.

     [வேள்விக்கூடத்தில் நெய்யால் சுடர்விட்டு எரியும் வேள்வித் தீ
 முன்னர்த் தன்மகளை  நிறுத்தித் தான்விரும்பிய தக்கோனுக்கு அவளை
 அவ்வேள்வித் தீ முன்னர்த் தானமாக வழங்குவதே தெய்வமணம் ஆகும்.]

     அசுரமாவது- கொல்லேறு கோடல், திரிபன்றி எய்தல், வில்லேற்றுதல்
 முதலியன செய்துகோடல்;

     முகைஅவிழ் கோதையை முள்எயிற்று அரிவையைத்
     தகைநலம் கருதும் தருக்கினர் உளர்எனின்
     இவைஇவை செய்தாற்கு எளியள்மற்று இவள்எனத்
     தொகைநிலை உரைத்த பின்றைப் பகைவலித்து
     அன்னவை ஆற்றிய அளவையின்
     தொன்னிலை அசுரம் துணிந்த ஆறே         தொல். பொ. 92 ந.

 என்ப ஆகலின்,

     [இவ்வனப்புடைய மகளை மணந்துகோடற்கு விரும்புவார்
 இவ்விச்செயல்களைச் செய்து  வெற்றி காண்டல் வேண்டும் என்று போட்டி
 அமைத்த பின்னர், மற்றவர்கள் தோற்று