ஓட அவ்வீரச்செயலைப் புரிந்தாற்கு அம்மகளை மணம்செய்து கொடுப்பதே  அசுரம் ஆகும்.  இஃது அரும்பொருள்வினை எனவும் படும்] 
     இராக்கதமாவது-தலைமகள் தன்னினும் தமரினும் பெறாது வலிதிற்  கொள்வது;  
     மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர் 
     வலிதிற்கொண்டு ஆள்வதே என்ப - வலிதின் 
     பராக்கதம் செய்துஉழலும் பாழி நிமிர்தோள் 
     இராக்கதத்தார் மன்றல் இயல்பு.              தொல். பொ. 92 ந.  
     [பொற்பூண் அணிந்த நங்கையைக்கண்டு காம மயக்கம் கொண்ட  ஆடவர்  அவள்இசைவும்  பெறாது அவளை வலிதின் கைப்பற்றிக் கொண்டு  சேறல், பிறர்பொருளைத்  தம்
 தோள் வலிமையால் கைப்பற்றித்திரியும்  இராக்கதர் தம் மணம் ஆகும்.]  
     பைசாசமாவது - மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும்,  இழிந்தோளை  மணம்செய்தலும், ஆடை மாறுதலும் பிறவும் ஆம்;  
     எச்சார்க்கு எளியர் இயைந்த காவலர் 
     பொச்சாப்பு எய்திய பொழுதுகொள் அமையத்து 
     மெய்ச்சார்பு எய்திய, மிகுபுகழ் நண்பின் 
     உசாவார்க்கு உதவாக் கேண்மைப் 
     பிசாசர் பேணிய பெருமைசால் இயல்பே.     தொல். பொ. 92 ந.  
     இடைமயக்கம் செய்யா இயல்பனின் நீங்கி 
     உடைமயக்கி உட்கறுத்தல் என்ப-உடையது      33  
 |  
 
  |  
  
							 | 
						 
					 
				 |