களவொழுக்கம் பொது ஆகலின் நான்கு வருணத்தார்க்கும் ஆயர் முதலியோர்க்கும் உரித்து. வில்லேற்றுதல் முதலியன பெரும்பான்மை அரசர்க்கு உரித்து; அவற்றுள் ஏறு தழுவல்ஆயர்க்கே சிறந்தது. இராக்கதமணம் அந்தணர் ஒழிந்தோர்க்குஉரித்து; வலிதின்பற்றிப்புணர்தலின் அரசர்க்கும் இது பெருவரவிற்று அன்று. பேய்நிலை இழிந்தோர்க்கே உரித்து.இக்களவுஒழுக்கம் வேதமுடிபு என்பார்,
"அந்தணர் அருமறை மன்றல் எட்டினுள்
கந்தருவ வழக்கம்" என்றார்.
கந்தருவ வழக்கத்தோடு ஒத்த வழக்கினைக் கந்தருவ வழக்கம் என்றது உபசார வழக்கு. 113
விளக்கம்
மேல் கூறிப்போந்த என்பது "அளவுஇல் இன்பத்து" இ. வி. பொ. 24 என்ற நூற்பாவினைச் சுட்டுகிறது.
மறை ஆகிய வேதம் பிறரால் எளிதின் அறியப்படாதது. அதுபோலப் பிறரால் எளிதின் அறியப்படாது நிகழ்ந்த புணர்ச்சி களவு எனப்பட்டது.
"அடுமரம் துஞ்சுதோள்" -
வலிய தோள்களை உடைய ஆடவரும் நல்லணி அணிந்த மகளிரும் மனம் தடுமாறி இருவர் நோக்கமும்