"இன்பமும் பொருளும் அறமும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறைஅமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே".
தொல். பொ. 92
"களவு எனப் படுவது யாதுஎன வினவின்
வளைகெழு முன்கை வளம்கெழு கூந்தல்
முளைஎயிற்று அமர்நகை மடநல் லாளொடு
தளைஅவிழ் தண்தார்க் காமன் அன்னோன்
விளையாட்டு இடம்என வேறுமலைச் சாரல்
மான்இனம் குருவியொடு கடிந்துவிளை யாடும்
ஆயமும் தோழியும் மருவிநன்கு அறியா
மாயப் புணர்ச்சி என்மனார் புலவர்".
" 92 நச். மேற்.
முழுதும் - இறை. அக. 1
"உளம்மலி காதல் களவுஎனப் படுவது
ஒருநான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப". ந. அ. 117
"முந்திய நூலோர் மொழிந்தஎண் மணத்தினும்
கந்திருவ முறைமை களவுஎனப் படுமே". த. நெ. வி. 14
"அவற்றுள், களவுஅந் தணர்மறை மன்றல்
எட்டனுள் யாழோர் இயல்பினது ஆகும்". மூ. வீ. கள.2 113