262                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இது மெய்க்கிளை யாழோர் வேண்டும் புணர்ச்சி முன் நிகழ்வதாகிய
 மேற்கூறிய கைக்கிளைப்பகுதி கூறுகின்றது.

     இ-ள்: காட்சி முதலாகச் சொல்லப்பட்ட மாட்சியை உடைய நான்கு
 வகையினை உடைத்து, நற்காமத்திற்கு உரிய கைக்கிளை என்றவாறு.     114

ஒத்த நூற்பாக்கள்

     "முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப."        தொல். பொ. 52

     முழுதும்-                                          ந. அ. 118

     "காண்டல் சந்தயம் தௌதல் கருத்துஉறல் என்றா
     ஆண்டநால் வகைத்தே அழகுஉடைக் கைக்கிளை".     மா. அ. 6

     "காட்சி ஐயம் தெளிதல் நயப்பே
     உட்கோள் தெய்வம் துணிதல் கைக்கிளை"        மூ.வீ. கள.7 114

காட்சி இலக்கணம்

 487 ஒன்றே வேறே என்றுஇரு பால்வயின்
     ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
     ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப்
     மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே

     இது மேற்கூறிய கைக்கிளைப் பகுதியுள் நிறுத்த முறையானே காட்சியது
 இலக்கணம்உணர்த்துகின்றது.

     இ-ள் உம்மைப் பிறப்பினும் காமம்நுகர்ந்தார் இருவரையும்
 மறுபிறப்பினும் ஒன்றுவித்தலும் வேறாக்கலுமாகிய இருவகை ஊழினுள்,
 இருவரையும் ஒன்றுவித்து உயர்தற்கு ஏதுவாகிய ஊழினதுஆணையாலே
 மேல் கூறும் பிறப்பு முதலாயின பத்தும் ஒத்த தலைவனும் தலைவியும்
 எதிர்ப்படுவர்,