அகத்திணையியல்-நூற்பா-115                              263


 

      அவ்வாறு எவ்வாற்றானும் ஒவ்வாது பிறப்புக் கல்வி பருவம் முதலிய
 சிலவற்றால் தலைவன் மிகுந்தான் ஆயினும் அம்மிகுதி பற்றிக் கடிதல்
கடிதலின்று என்றவாறு.

     எனவே, இவற்றுள் யாதொன்றாயினும் தலைவி மிக்காள் ஆயின்
 அம்மிகுதிபற்றி அவளைக் கடிதல் கடிதலுடைத்து என்றவாறாம்.
 "உயர்ந்தபால்" என்பது நோய்தீர்ந்த மருந்துபோல உயர்ந்ததன் மேல்
 செல்லும் மனநிகழ்ச்சிக்கு ஏதுவாய் இருந்த பால் என ஏதுப்பொருட்டாய்
 நின்றது, அதனது ஆணையால் இழிந்ததன்மேல் சேறல் இன்றாகலின்.

     கிழவன் கிழத்தி எனவே, பலபிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர்
 உரிமைபூண்டு நின்றமையும் பெற்றாம்.

     "காண்ப" எனப்பொதுப்படக் கூறிய அதனானே, இருவர்க்கும்
 பொதுவாகிய ஒருநிலத்தும் ஒருவர்க்குச் சிறந்த வேற்று நிலத்தும் காண்பர்
 எனக்கொள்க. ஈண்டு நிலம் என்றது, அவ்வொழுக்கத்திற்குச் சிறந்த
 குறிஞ்சித்திணைக்கு உரிய வரையும் வரைசார்ந்த இடமும் எனக்கொள்க.

     இவன் இவள் ஐம்பால் பற்றவும் அவள்இவன்
     புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்
     காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
     ஏதில் சிறுசெரு உறுப மன்னே
     நல்லைமன்ற அம்ம பாலே! மெல்லியல்
     துணைமலர்ப் பிணையல் அன்ன இவர்
     மனம்மகிழ் இயற்கை காட்டி யோயே".                குறுந். 229


 இஃது ஓர்ஊர் என்பதாம்.

     இலங்கும் அருவித்தே இலங்கும் அருவித்தே
     வானின் இலங்கும் அருவித்தே தான்உற்ற
     சூள்பேணான் பொய்த்தான் மலை                       கலி-41