அகத்திணையியல்-நூற்பா-115                              265


 

 நச்சினார்க்கினியர் உரை:

      "தலைவன் மிக்கோன் ஆயினும் கடிவரையின்றே"

 என்ற கூற்றை விளக்கும்.

     இக்களவொழுக்கம் கொடுப்போரும் அடுப்போரும் இன்றித் தாமே
 தனிஇடத்து எதிர்ப்பட்டுப் புணரும் கந்தருவத்தோடு ஒக்கும் என்றலின்,
 இருவரும் அவ்வாறு ஓரிடத்தும் வேறுஇடத்தும் காண்புழித் தனித்துக்காண்பர்
 என்பதூஉம் பெற்றாம்.

     பெறவே, இருவரும் முட்டில் செல்வத்தர் ஆதலின் தலைவனும்
 கறங்கும்  கந்துகத்தேர்ஏறி எறிபோத்தும் கருங்கண்யானையும் தறுகட்
 பன்றியும் கருவரையும் இருநிலனும்  பெருவிசும்பும் அனையார், ஆளி
 மொய்ம்பினர் அரிமான்துப்பினர், பற்பல் நூறாயிரவர்  கூர்வேல் இளைஞர்
 தற்சூழ, வேட்டை விருப்பால் செல்வான் என்பது முடிந்தது.

     தலைவியும் உடன்பிறந்து உடன்வளர்ந்து நீர்உடன் ஆடிச் சீர்உடன்
 பெருகி  ஓல்உடன் ஆட்டப் பால்உடன் உண்டு பல்உடன் எழுந்து
 சொல்உடன்கற்றுப்  பழைமையும் பயிற்சியும் பண்பும் நண்பும் விழுப்பமும்
 ஒழுக்கமும் மாட்சியும் உடையார் பற்பல்  நூறாயிரவர், கண்ணும் மனனும்
 கவரும் ஒள்நுதல் மகளிர் தற்சூழ, தாரகை நடுவண் தண்மதிபோலப்
 பொழில்விளையாட்டு விருப்பால் செல்வாள் என்பது முடிந்தது.

     முடியவே, தனித்துக் காண்டல் முடியாது எனின், முடியும்; என்னை?
 அவள் ஆயங்களும்  பொழில்இடம் புகுதலும், விளையாட்டு விருப்பினால்
 ஒவ்வொருவரின் முன்னம் "தழை விழைந்தன கொடுத்தும்" என்றும், "கண்ணி
 தண்ணறு நாற்றத்தன செய்தும்" என்றும், "போது மேதக்கன

      34