அகத்திணையியல்-நூற்பா-115 269
தலைவனைப் போலத் தலைவி வியத்தல் புலனெறி வழக்கு அன்று எனினும் உலகியலில் நிகழும் என்பது,
"முன்னேவந்து எதிர்தோன்றும் முருகனோ பெருகுஒளியால் தன்நேர்இல் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ"
என்று சுந்தரரைப் பரவையார் கண்டு வியந்த திருத்தொண்டர் புராணச் செய்தியான் அறிக.
"நம்பி, எண்ணின் மற்று யாவன் ஆங்கொல்" என்று காந்தவருவதத்தை சீவகனை வியந்து ஐயுற்றதும் உலகியலாம். இவை கந்தருவத்துட்பட்டு வழுவிய உலகியலாம் என்பது அறிக
ஒத்த நூற்பாக்கள்
"முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவல்அருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே" தொல். பொ. 106
"கிழவோன் அறியா அறிவினள் இவள்என மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் ஐயக் கிளவி அறிதலும் உரித்தே" " 117
"முழுதும். - " 93
"தானே அவளே தமியர் காணக் காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்" இறை. அக. 2
"புணர்ப்பதும் பிரிப்பதும் ஆகிய பால்களுள் புணர்க்கும் பாலின் பொருஇறந்து ஒத்த கறைவேல் காளையும் கன்னியும் காண்ப இறையோன் உயரினும் குறைவுஇன்று என்மனார்" ந. அ. 119
"நிலம்வேறு ஒன்றுஎனும் நிலைமையர் ஆகி குலன்நலன் திருஉரு குறிக்கொளின் ஒன்றா இறைவனும் இறைவியும் இருமையும் தொடர்ந்த