270                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     முறைபயில் பான்மை மூதுடை முதல்வன்
     ஏவலின் கண்ணுறும் இயற்கைக் காட்சி
     காவலன் உயரினும் கடிநிலை இலவே".                மா. அ. 7

                                                            118

பத்துவகை ஒப்புக்கள்

 488 பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
     உருவு நிறுத்த காம வாயில்
     நிறையே அருளே உணர்வொடு திருஎன
     முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.
     

     மேல் ஒத்த கிழவனும் கிழத்தியும் என்றார், இஃது அவ்வொப்பின்
 பாகுபாடு கூறுகின்றது.

     இ-ள் ஒத்த பிறப்பு முதலிய பத்துவகையினை உடைய; மேல்
 நெறிப்படக்கூறிய ஒப்பினது பாகுபாடு என்றவாறு.

     பிறப்பு - குடிப்பிறத்தல்; குடிமை-அதற்குத்தக்க ஒழுக்கமுடைமை;
 ஆண்மை-ஆள்வினை; ஆண்டு-பெண்மையும் ஆண்மையும் பிறக்கும்
 பன்னீராண்டும் பதினாறாண்டும் ஆகிய பருவம்; உருவு-பெண்மைவடிவும்
 ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்த வனப்பு; நிறுத்த காமவாயில்-
 நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயிலாகிய அன்பு; நிறை - மறை பிறர்
 அறியாமை நெஞ்சினை நிறுத்துதல்; அருள்-பிறர் வருத்தத்திற்குப் பரியும்
 கருணை; உணர்வு-உலகியலால் செய்யத் தகுவது அறிதல்; திரு-செல்வம். 116

விளக்கம்

     உரை இந்நூற்பாவிற்குப் பேராசிரியர் வரைந்த உரையையே
 பெரும்பான்மையும் தழுவியுள்ளது.

     அவர், திரு என்பதற்குப் "பொருள் உடைமையும் பொருள் கொண்டு
 துய்த்தலும்இன்றி, எஞ்ஞான்றும் திருத்தகவிற்று ஆயது ஓர் உள்ள நிகழ்ச்சி" என்று கூறிய உரையை