ஐயம் ஏற்படும் இடம்
489 மடமான் நோக்கி வடிவும் கண்ட
இடமும் சிறந்துழி எய்துவது ஐயம்.
இஃது ஐயம் நிகழும் இடம் உணர்த்திய முகத்தான் அதன் இலக்கணம்
உணர்த்துகின்றது.
இ-ள் தலைமகள் வடிவும் அவளைத் தான் கண்ட இடமும் சிறந்த
காலத்துத "தெய்வமோ? மக்களுள் உள்ளாளோ?" என ஐயுறுவது யாம்
மேற் கூறிய ஐயமாம் என்றவாறு.
எனவே, அவை சிறப்புடைய அல்லாக் காலத்து இழிபு சுட்டப்படுதலான்,
ஐயம் நிகழாது என்பதாம்; என்னை?