274                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

விளக்கம்

     உரை பெரும்பாலும் நச்சினார்க்கினியர் உரைத்தனவே.

தொல். பொ.95

     "பாயும் விடை"-

     "தெய்வமகளோ மானிடமகளோ என்று ஐயுறவோடு துயருற்று
 ஆராயும் மன்னே! இச்சிறுநுதலாள் ஆகிய தில்லை அன்னாளின்
 கண்இமைக்கும்; அடிநிலம் தோயும்;மலர் வாடும்;  ஆதலின் இவள் அணங்கு
 அல்லள்" என்று தலைவன் மனத்தைத் தெளிவித்தவாறு.

ஒத்த நூற்பாக்கள்

    "வண்டே இழையே வள்ளி பூவே
     கண்ணே அலமரல் இமைப்பே அச்சம்என்று
     அன்னவை பிறவும் ஆங்குஅவண் நிகழ
     நின்றவை களையும் கருவி என்ப".                தொல். பொ.95

     முழுதும். -                                         ந. அ. 121

    "அலம்வரல் கண்இமைப்பு அச்சம் உகக்கும்
     மலர்உயிர்ப்பு அதனில் வாடுதல் வெயர்த்தல்
     ஒளிர்கலன் வள்ளி வண்டுடன் நிழலிடுதல்
     அடிநிலம் தோய்தல் அவண்நிகழ் ஐயம்
     கடிவன ஆகும் காவலன் தனக்கே".                   மா. அ. 9

188

குறிப்பறிதல்

 491 அரிவை நாட்டம் அகத்துநிகழ் வேட்கை
     தெரிய உணர்த்தும் குரிசிற்கு என்ப.

     இது குறிப்பு அறிதற்கு ஏதுக்கூறும் முகத்தான் அதற்கு இலக்கணம்
 உணர்த்துகின்றது.

     இ-ள் தலைமகள் கண்ணானது அவள்உள்ளத்து நிகழா நின்ற
 வேட்கையினை விளங்க அறிவிக்கும் தலைமகற்கு;