276                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     குறிப்பு அறிந்தவழித் தெய்வத்தை மகிழ்ந்து உரைத்தலுக்குச் செய்யுள்:

 "வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
  துளைவழி நேர்கழி கோத்தென, தில்லைத்தொல் லோன்கயலை
  கிளைவயின் நீக்கிஇக் கெண்டைஅம் கண்ணியைக் கொண்டுதந்த
  விளைவைஅல் லால்விய வேன்நய வேன்தெய்வம் மிக்கனவே"

   திருக்கோவை.6

 எனவும்,

     தெய்வப்புணர்ச்சி துணிதற்குச் செய்யுள்:

 "ஏழ்உடை யான்பொழில் எட்டுஉடை யான்புயம் என்னைமுன்னாள்
  ஊழ்உடை யான்புலி யூர்அன்ன பொன்இல் வுயர்பொழில்வாய்ச்
  சூழ்உடை ஆயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே
  யாழ்உடை யார்மணம் காண்அணங் காய்வந்து அகப்பட்டதே".

 எனவும் வரும்.

     இவை ஒருதலைக்காமம் அல்லவேனும் புணர்ச்சி நிகழாமையின்
 கைக்கிளைப்பாற்படும்.                                          119

விளக்கம் 

     கண் ஆனது என்பதற்குப் பார்வை ஆனது என்று பொருள்கொள்க,
 கண் என்று தனித்துக் கூறியவழி அது பன்மைச் சொல் ஆகலான்.
 வழிநிலைக்காட்சி-தலைவியைக் கண்டவழி நிகழும் குறிப்புஅறிதல்.புகுமுகம்
 புரிதல்-தலைமகன் நோக்கிய நோக்கு எதிர்த் தலைவி தான்சென்று புகுதல்.

     "நோக்கினாள் நோக்கு" -

     பெருவனப்பினை உடைய தலைவி தலைவன் நோக்கிய நோக்கிற்கு
 எதிர்த் தான் நோக்கிய  நோக்கம், தானேயும் தீண்டி வருத்தும் தெய்வம்
 படையோடு வந்து வருந்தியதனை ஒக்கும்  என்றவாறு.