278                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

    "குறிப்பே குறித்தது கொள்ளுமாயின்
     ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்".

  தொல். பொ. 97 

"ழுமுதும்" - ந. அ. 122 

    "கண்இணை புகுமுகம் புரிதலின் காரிகை
     உள்நிகழ் வேட்கை உரவோற்கு உணர்த்தும்."

மா. அ. 10 

    "வழிநிலைக் காட்சியும் உள்ளப் புணர்ச்சி என்று
     எழில்பெறுமேனும் இணைவிழைச்சு இன்றால்
     கைக்கிளை என்பதம் கடன்எனத் தகுமே".

                                                      மா. அ. 11

                                                            119

களவிற்குரிய கிளவித்தொகை

 492 இயற்கைப் புணர்ச்சி1 வன்புறை2 தெளிவே3
     பிரிவுழி மகிழ்ச்சி4 பிரிவுழிக் கலங்கல்5
     இடந்தலைப் பாடு6 பாங்கற் கூட்டம்7
     பாங்கிமதி உடன்பாடு8 பாங்கியிற் கூட்டம்9
     பாங்குஅமை பகற்குறி10 பகற்குறி இடையீடு11
     இரவுக் குறியே12 இரவுக்குறி இடையீடு13
     வரைவு வேட்கை14 வரைவு கடாதல்15
     ஒருவழித் தணத்தல்16 வரைவுஇடை வைத்துப்
     பொருள்வயின் பிரிதல்17 என்பது ஒருபதி னேழும்
     களவற்கு உரிய கிளவித் தொகையே.

     இது களவு என்னும் கைகோளிற்கு உரிய கிளவித்தொகை
 இத்துணைப்பகுதித்து என்கின்றது.

     இ-ள் இயற்கைப்புணர்ச்சி முதலாக வரைவுஇடை வைத்துப்
 பொருள்வயின் பிரிதல் ஈறாகச் சொல்லப்பட்ட பதினேழும் களவு என்னும்
 கைகோளிற்கு உரிய கிளவிகளின் தொகையாம் என்றவாறு.            120

விளக்கம் 

     கிளவி-நிகழ்ச்சயை விளக்கும் தலைப்பு; கருமநிகழ்ச்சி ஆகிய இடம்.