280                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

தெய்வப் புணர்ச்சியின் விரி

 493 கலந்துழி மகிழ்தலும்1 நலம்பா ராட்டலும்
     ஏற்புற அணிதலும்3 என்னும்இம் மூன்றும்
     போற்றிய தெய்வப் புணர்ச்சியின் விரியே.

     நிறுத்த முறையானே இயற்கைப் புணர்ச்சிக்கு உரியவகையும் விரியும்
 கூறுவனவற்றுள் இஃது அதன் பகுதியாக மேற் கூறிப் போந்த தெய்வப்
 புணர்ச்சிக்கு வகையின்று ஆகலின் அதன் விரி கூறுகின்றது

     இ-ள் தெய்வப்புணர்ச்சி துணிந்த பின் வேட்கைமிக அதனால் அவள்
 இன்றியமையாமையின் புணரும் அன்றோ? புணர்ந்துழி அப்புணர்ச்சி
 இன்பத்தை மகிழ்ந்து உரைத்தலும், புணர்ச்சிதான் புணராதமுன் நின்ற
 வேட்கை புணர்ந்த பின்னும் மீதூர்தலான் அந்நலத்தைப் புகழ்ந்து
 உரைத்தலும், புணர்ச்சியால் சிதைந்தவற்றைப் பண்டுபோலப் பொருந்த
 அணிதலும் என்னும் இம்மூன்று கிளவியும் மேல் போற்றப்பட்ட
 தெய்வப்புணர்ச்சியின் விரியாம் என்றவாறு

     மேல் போற்றப்பட்டவாறு என்னை எனின்,

    "தெய்வம் தன்னின் எய்தவும் கிழத்தியின்
     எய்தவும் படூஉம் இயற்கைப் புணர்ச்சி"                     29

 எனவும்,

    "இயற்கைப் புணர்ச்சி தெய்வத்தின் எய்துழி
     முயற்சி இன்றி முடிவது ஆகும்"                           30

 எனவும் கூறிப்போந்தமையாம் என்க

     "போற்றிய" என்ற மிகையானே இங்ஙனம் புணர்ச்சி இன்பத்தை
 மகிழ்ந்து சொல்லக் கேட்ட தலைமகள் நாணம் மிக்குச் சொல்லாடாள்
 அன்றே? அவள் உறுப்புக் கண்டு திசால்கேட்க விரும்புதலும்,
 அங்ஙனம் விரும்புதலான் அன்பு