282                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     சொல் கேட்க விரும்புதல்:

    "அளவியை யார்க்கும் அறிவுஅரி யோன்தில்லை அம்பலம்போல்
     வளவிய வான்கொங்கை வாள்தடங் கண்நுதல் மாமதியின்
     பிளவுஇயல் மின்இடை பேர்அமை தோள்இது பெற்றிஎன்றால்
     கிளவியை என்னோ இனிக்கிள்ளை யார்வாயில் கேட்கின்றதே"

திருக்கோவை. 10 

 எனவும்,

     ["அளத்தற்கரிய சிறப்பினனாகிய சிவபெருமான் தில்லை அம்பலம்
 போலக் கொங்கைகள் வளவியன்; கண்கள் வாள் போன்றன; நுதல் பிறை
 போன்றது; இடை மின்னல் போன்றது; தோள் அமை போன்றன; இவள்
 மொழி கிளிமொழி போலும்; இவள் பேச்சைக் கேட்க விரும்புவது என்னே?"
 என்று தலைவன் தன்மனத்திடம் சொற்றது.]

     சொல் கேளாத அயர்வு நீங்கியது;

    "கூம்பல்அம் கைத்தலத்து அன்பர்என்பு ஊடுஉரு கக்குனிக்கும்
     பாம்புஅலங் காரப் பரன்தில்லை அம்பலம் பாடலரின்
     தேம்பல்அம் சிற்றிடை ஈங்குஇவள் தீங்கனி வாய்கமழும்
     ஆம்பல்அம் போதுஉள வோஅளி காள்நும் அகன்பணையே"

திருக்கோவை. 11 

 எனவும்,

     [வண்டுகளே! நும் அகன்ற மருத நிலத்தில், சிவபெருமானுடைய
 அம்பலத்தைப் பாடாதரைப் போல வாடும் இச்சற்றிடையாளது வாய்போல
 நறுமணம், வீசும் ஆம்பற் பூக்கள் உளவோ?]

     ஏற்புற அணிதல்:

    "தூசும் கலையும் தொலையா அழகுஎறிக் கும்தொடியும்
     வாசம் கமழும் மதுமலர் ஓதியும் வண்களபம்
     பூசும் கனதனம் பூணும் முத்தாரமும் பூங்குழையும்
     ஆசும் பழுதில்பொன் னேபண்டு போல அணிந்தனமே"

அம்பி. 7 

 எனவும் வரும்.                                               121