[பழுதற்ற பொன்னே! தூசு, கலை, தொடி, மலர்சூடிய ஓதி, மார்பில் பூணும் முத்தாரம், குழை, ஆசுகள் இவற்றைப் பண்டுபோல ஒப்பனை செய்துவிட்டேன் ஆதலில், கவலையும் நாணமும் வேண்டா.]
"தெய்வம் புணர்ப்பச் சிந்தைவேறு ஆகி
எய்தும் கிழத்தியை இறையேன் என்ப".
ந. அ. 124
"தன்னயம் தெளிதலும் தலைப்பிரிவு அச்சமும்
இன்னியல் வன்பொறை எய்துதல் அருமையும்
உயிர்எனக் கூறலும் ஆற்றினன் பெயர்தலும்
செயிர்தபு காதல் தெய்வப் புணர்ச்சி".
"கடவுளது ஆணையின் கருத்துநிலை திரிந்து
மடவரல் நங்கையை மன்னவன் எய்தும்"
"புதுவது வாகப் புணர்ந்துழி மகிழ்தலும்
அதுபொழுது அவள்நலம் அவன்பா ராட்டலும்
அடல்புனை வேலோன் ஏற்புற அணிதலும்
கடவுளின் எய்தும் காலையின் விரியே".
494 வேட்கை உரைத்தல் மறுத்தல் உடன்படல்
கூட்டம்என்று இறைவியின் கூட்டம்நால் வகைத்தே.
இது நிறுத்த முறையானே தலைவியின் புணர்ச்சிவகை இத்துணைப் பகுதித்து என்கின்றது.
இ-ள் வேட்கை உரைத்தல் முதலாகக் கூட்டம் ஈறாகச் சொல்லப்பட்ட நான்கு பகுதியினை உடைத்து; தலைமகளால் புணரும் புணர்ச்சி என்றவாறு. 122
|
|
|
|