286                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 9 தலைவியின் செய்கையால் காலம் நீட்டித்தலை அறிந்து
   தலைவன் கூறுதல்.

 10 தன் நாணத்தை மறுத்துத் தலைவனைத் தலைவி ஏற்றுக்கோடல்.

 11 தலைவி புன்னகை செய்தல். வறிது-சிறிது.

 12 தலைவியின் புன்னகையால் பெற்ற உடன்பாட்டுக் குறிப்பினைத்
   தலைவன் அறிதல்.

 13 தலைவியைத் தழுவுதல்.

 14 புணர்ச்சியின் மகிழ்தல்.

 15 தலைவியின் நலத்தைத் தலைவன் பாராட்டுதல்.

     நாணினால் வருந்தும் தலைவியின் பக்கத்தை அடைந்த தலைவன்,
 அவள் கூந்தலில் கூடிய மாலையில் மொய்த்திருக்கும் வண்டுகளை
 ஓட்டுவான்போல் அவளை நெருங்குதல் வண்டு ஓச்சி மருங்கு அணைதல்
 ஆகும்.

     நிலைகுலைந்த அணிகளை முன்போலவே தலைவன் தலைவிக்கு
 அணிவித்தல் ஏற்புற அணிதலாகும்.

     இயற்கைப்புணர்ச்சி தெய்வத்தின் முடிந்தவழி முயற்சி இன்றி
 முடிவதுபோல, தலைவியின் முடிந்தவழித் தலைவனுடைய முயற்சியாலேயே
 நடைபெறுவதாம் என்றவாறு.

     இதன்கண்ணும் நலம் பாராட்டலின்பின் தலைவன் தலைவியின் சொல்
 கேட்க விரும்புதலும், சொல் கேளாத அயர்வு நீங்குதலும் கொள்ளப்படும்]

     இரந்து பின் நிற்றற்கு எண்ணல்:

     "மருந்தின் தீராது மணியின் ஆகாது
     அருந்தவ முயற்சியின் அகறலும் அரிதே
     தான்செய் நோய்க்குத் தான்மருந்து ஆகிய