நீங்காது நின் அருளினாலேயே நீக்கப்படல் வேண்டியதாகும் என்று கூறிச் செல்வோம்" என்று தலைவன் தலைவியை இரந்து பின் நிற்றற்கு எண்ணியவாறு. இனி, தலைவிக்கு உயிரனையாள் தோழியாக, அவளை இரந்து பின் நிற்றற்குத் தலைவன் தோழியிற் கூட்டத்தின்கண் இங்ஙனம் கூறினான் ஆதலும் அமையும்.]
"செறிவேழ வெஞ்சிலை வேள்தஞ்சை வாணன் திருந்தலர்மேல்
எறிவேலை வென்றகண் என்உயிர்க்கு ஏவி இருண்டு அறல்போல்
நெறிவேய் அலங்கல் முடித்தலை சாய்த்து இங்ஙன் நிற்பதுதான்
அறிவே அறிந்த உனக்குஅலர் மாளிகை ஆரணங்கே".
["தாமரைவாழ் திருவே! கருப்பு வில்லியாகிய மன்மதனை ஒத்துப் பிறர் மாதரை விரும்பாத தஞ்சைவாணன் பகைவர்மேல் செலுத்திய வேலைவென்ற கண்களை என் உயிர் போமாறு பாய்ச்சி, கருமணல் போன்ற நெறிப்பை உடைய மயிர்வேய்ந்த கூந்தலை உடைய தலையைச் சாய்த்துக் கொண்டு இவ்வாறு நிற்பது உனக்கு ஏற்புடையது ஆகுமா?" என்று தலைவியை நோக்கித் தலைவன் சொற்றது.]
"வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன்தென் மாறைவண்டு
தொழுதியல் ஆர்செய் குழல்மட வீர்நும்குற் றேவல்செய்து
தொழுதுஇயல் ஆயத்தொகுதியொடு ஆடிச் சுனைகுடையாது
எழுதிய பாவையைப் போல்நின்ற வாறுஎன் இயம்புமினே".
["பாண்டியர் புகழை வளர்க்கும் வாணனுடைய தென் மாறையில் வண்டினம் தங்கும் குழல் மடவாய்! உன் குற்றேவல் செய்து தொழிற்படும் தோழியர் குழாத்துடன்
|
|
|
|