விளையாடிச் சுனையில் படியாது பொம்மையைப் போல இடம் பெயராது நிற்பதன் காரணத்தைக் கூறுவாயாக" என்று தலைவன் தலைவியை வினாயது.]
"கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக்கு அஃதே குறைப்பவர்தம்
சீலத் தன கொங்கை தேற்றகி லேம்சிவன் தில்லையன்னாள்
நூல்ஒத்த நேர்இடை நொய்மைஎண் ணாது நுண் தேன்நசையால்
சாலத் தகாது கண்டீர் வண்டு காள் கொண்டை சார்வதுவே".
["வண்டுகளே! அழகிய தனிக்கிளைமேல் அமர்ந்து அதனையே வெட்டுவாரைப்போன்ற பண்புடைய கொங்கைகள் என் அறிவுரைகளை ஏலா; சிவபெருமானுடைய தில்லையை ஒத்த இந்நங்கையின் நூல்போன்ற இடையின் நொய்மையைக் கருதாமல், மயிர்முடிமேல் அமர்ந்து பாரத்தை மிகுவிப்பது உங்களுக்கு ஏற்றது அன்று" என்று தலைவன் வண்டினங்களிடம் சொற்றது.]
"உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்."
"அளகம் திருத்தி, மதிநுதல் நீவி, அளிஅகற்றிப்,
புளகம்செய் தோளில் புரிவளை ஏற்றிப் புதியதென்றல்
கிளரும் கொழுந்தளிர் மெல்லடி தைவந்த இன்பம்உறக்,
களபம் செறிதனத் தாய்!பெற்ற வாஎன் கரதலமே".
[யான் தழுவும் தோறும் என் உயிர் புதுக்கிளர்ச்சி பெறுமாறு செய்வதால், இத்தலைவியின் தோள்கள் அமிர்தத்தால் இயன்றனவாம். 37
|
|
|
|