"சந்தனம் பூசிய தனங்களை உடையாய்! என் கைகள் நின் மயிர்  முடியைத்திருத்தி,  நுதலைத் தடவி, வண்டுகளை ஓட்டி, தோள்வளைகளைத்  திருத்தம் செய்து நின்தளிர்  மெல்லடிகளைத் தடவி இன்பம் உறும்   வாய்ப்புப் பெற்றனவே.]  
    "மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் 
     காதலை வாழி மதி". 	 
    "பருந்துஒன்று கூர்இலை வேல்படை வாணன் பரிமளப்பூஞ் 
     செருந்துஒன்று சோலைத்தென் மாறைஅன் னீர்செழுந் திங்கள்                                                       உங்கள் 
     முருந்து ஒன்றுகோப முகம்கண்டு நாணி முயல்மறுத்தீர் 
     மருந்துஒன்று தேடிஅன் றோமகமேரு வலம்கொள்வதே".  
     [என் தலைவியின் முகம்போல ஒளிவிடும் ஆற்றல் உடையையாயின்,  மதியே! நீ என்னால்  காதலிக்கப்படுவாய். அஃது இன்மையால் என்னால்  காதலிக்கப் படாய்.
  
     பருந்து பின்தொடரும் வேற்படை வாணனுடைய மணம்மிக்க   செருந்திமரம் செறிந்த  சோலையை உடைய மாறை அன்னாய்! சந்திரன்.   உன்னுடைய மயில் இறகின் அடிபோன்ற  வெள்ளிய பற்கள், இந்திரகோபம்   போன்ற இதழ், ஒளிமுகம் இவற்றைக் கண்டு நாணித்  தன்இடத்துள்ள   முயற்களங்கத்தைத் தீர்க்க மருந்து தேடியே, மேருமலையைச் சுற்றி  வருகிறான்.)  
    "மடைக்கண் தரளம் சொரிவையை நாடுஅன்ன வையம்ஒரு 
     குடைக்கண் தனிபுரப் பார்சொக்க நாயகர் கூடல்அன்னார் 
     கடைக்கண் கருணைஉண்டு ஆரும்இல் லாதபொற் காவும்உண்டு 
     புடைக்கும் தருண வனமுலை யாய்இன்று புல்லுவமே".
  
		
 |  
 
  |  
  
							 | 
						 
					 
				 |