அகத்திணையியல்-நூற்பா-123                              291


 

     [நீர்மடையில் முத்துச் சொரியும் வையை நாடுபோல உலகம்
 முழுதையும் தம் குடைக்கண் வைத்துக் காக்கும் சொக்கநாயகருடைய
 கூடல்நகர் போன்ற இயற்கை அழகுடைய தலைவியின் கடைக்கண் தரும்
 அருளும், ஒருவரும் இல்லாத சோலையும் உண்டு ஆதலின், தலைவன்
 புணர்ச்சியைத் துணிந்து "இவளை விளித்து இன்று தழுவுவோம்" என்று
 கருதியவாறு]

     வழிபாடு மறுத்தல் -

    "அகல்இடம் தாவிய வானோன் அறிந்துஇறைஞ்சு அம்பலத்தின்
     இகல்இடம் தாவிடை ஈசன் தொழாரின்இன் னற்குஇடமாய்
     உகல்இடம் தான்சென்று எனதுஉயிர் நையா வகைஒதுங்கப்
     புகல்இடம் தாபொழில் வாய்எழில் வாய்தரு பூங்கொடியே".

திருக்கோவை. 42 

 எனவும் வரும்.

     வழிபாடு மறுத்தல் -

      இடம்பெற்றுத் தழுவியபின் தலைவி வேட்கைக் குறிப்புக் கண்டு
 தலைவன் சார்தல் உற்றவழி, அவள் அதற்கு உடன்படாது மறுத்தல்.

     [உலகத்தை அளந்த திருமால் அறிந்து வணங்கும் அம்பலத்தில் உள்ள
 விடைஏறியாகிய சிவபெருமானைத் தொழாதவரைப் போலத் துன்பத்துக்கு
 இருப்பிடமாய் அழிவை அடைந்து என் உயிர் வருந்தாதபடி, சோலையில்
 எழில்வாய்ந்த பூங்கொடியே! யான் ஒதுங்குவதற்கு இடம் தருவாயாக.]

     இடையூறு கிளத்தல் -

 "தாழச்செய் தார்முடி தன்அடிக் கீழ்வைத்து அவரைவிண்ணோர்
  சூழச்செய் தான்அம் பலம்கை தொழாரின்உள் ளம்துளங்கப்
  போழச்செய் யாமல்வை வேல்கண் புதைத்துப்பொன் னேஎன்னைநீ
  வாழச்செய் தாய்சுற்றும் முற்றும் புதைநின்னை வாள்நுதலே".

திருக்கோவை. 43 

 எனவும்,