[தன்னை வணங்கினவர் முடிகளைத் திருவடிக்கண் கொண்டு அவரைத் தேவரும் வணங்குமாறு செய்யும் சிவபெருமானுடைய அம்பலத்தை வணங்காதவர்களைப் பால மனம் வருந்துமாறு அதனைப் பிளக்காமல், கண்களைப் பொத்திக் கொண்ட நீ உடல் முழுவதையும் மறைத்துக்கொள்; அப்போது என் துளக்கம் தீர்த்து என்னை வாழச் செய்தாய் ஆவாய்.]
நீடு நினைந்து இரங்கல்:
"காதல் மடந்தையர் கைஅகல் காலையும் மெய்அகலா
மேதகுநாணும் மெலியஅன் றோவிழி போலும்நெய்தல்
போதுஅவிழ் மென்மலர்ப் புன்னையங் கானல் பொருந்துமிந்த
மாதவி பெற்ற மணிமே கலைநம்மை வாழ்விப்பதே".
["விழி போன்ற நெய்தல் மலரும் புன்னையங்கானலில் பொருந்திய மாதவியாம் கொடியைச் சார்ந்த மணிமேகலை அணிந்த தலைவி, மகளிர்க்குச் செயலற்ற காலத்தும் உடலை விட்டு நீங்காத நாணம் மெலிதலினால், நம்மை வாழ வைப்பவள் ஆவாள்" என்று தலைவன் சிறிதுஆறுதல் உற்றவாறு]
"குருநாள் மலர்ப்பொழில்சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழிய ரோமற்றுஎன் கண்மணிபோல்
ஒருநாள் பிரியாது உயிரின் பழகி உடன்வளர்ந்த
அருநாண் அளிய அழல்சேர் மெழுகுஒத்து அழிகின்றதே".
[என் கண்மணிபோன்று சிறந்ததாய் ஒருநாளும் என்னை விட்டு நீங்காது உயிர்போல அரியதாய் என்னுடன் வளர்ந்த அருமையான நாணம், இப்பொழுது நெருப்பைச் சார்ந்த |
|
|
|