அகத்திணையியல்-நூற்பா-123                              293


 

     மெழுகுபோல உருகி ஓடுகின்றது. சிவபெருமானை வழிபடாதவர்
 மீண்டும் பிறப்பார் அல்லரோ? அவர்களைப்போல, எதிர்காலத்தில் நான்
 இவ்வாறு நாணத்தை விடும் பிறப்பு எடுக்கும் நிலையைப் பெறாது
 ஒழிவேனாக.]

     வறிதுநகை தோற்றல்:

    "பூணும் தரள நிரைஅவிர் தோற்றமும் பூந்தளவின்
     சேணும் கமழும் முகையும் தகையும் செழுஞ்சிலம்பின்
     காணும்கலப மயில்நெடும் பீலியின் காலும் சிந்தை
     நாணும் கெடவறி தேநகைசெய் தாள்மதி வாள் நுதலே".

அம்பி. 38 

 எனவும்,

     [பிறைநுதலினாள், முத்தும் முல்லைமுகையும் மலையிற் காணும் மயில்
 இறகின் அடியும் வெண்ணிறம்கண்டு தோற்குமாறு புன்முறுவல் செய்தாள்.]

     முறுவல் குறிப்பு உணர்தல்:

    "முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
     நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு".

குறள் 1274 

 எனவும் வரும்.

    "மிகலே ஒழியக் குறைவுஅற நீடிய வெம்துயர்க்குஓர்
     புகல்ஏதும் இன்றிப் புலம்பல்நெஞ் சேபொருந் தார்வருந்த
     இகலே செயும்அயில் அன்னகண் ணாள்முகத்து எல்லிஅன்றிப்
     பகலே நிலவும் பவளத்துள் ளேவந்து பாரித்ததே".

அம்பி. 39 

 இதுவும் அது,

     [மொட்டிற்குள் மணம் பொதிந்து இருப்பதுபோல, இவள்
 புன்முறுவலுள்ளும் உடன்பாட்டுக்குறிப்பு மறைந்து நிற்கின்றது.