294                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     கணந்தோறும் மிக்குக் குறைதல் அறியாத துயர்தீரப் போக்குவீடு இன்றி,
 நெஞ்சே! நீ தனிமைத் துயர் உறாதே; வேற்கண்ணாளாகிய தலைவியின்
 முகமாகிய சந்திரனில் இரவில் அன்றிப் பகற்பொழுதும் பவளவாய்வழியே
 பற்களின் ஒளியாகிய நிலவும் வெளிப்பட்டுவிட்டது)

     முயங்குதல் உறுத்தல்:

    "வானக் கதிரவன் மண்ணக மாதை மணந்தது ஒக்கும்
     நானக் குழலியை நான்இன்று பெற்றது நாவலர்க்குத்
     தானக் களிறு தரும்புயல் வாணன் தமிழ்த்தஞ்சைசூழ்
     கானக் கடிவரை வாய்விரை நாள்மலர்க் காவகத்தே".

 தஞ்சை. 17 

     எனவும்,

     [புலவருக்கு யானைகளைப் பரிசில் நல்கும் கார்மேகம் போன்ற கொடை
 உடைய வாணனுடைய தஞ்சையைச் சூழ்ந்த மலைச்சோலையில்
 இத்தலைவியை நான் இன்று பெற்ற செயல், வானத்திலுள்ள சூரியன்
 பூமியிலுள்ள பெண்ஒருத்தியை அடைவது போன்ற செயற்கரிய செயலாகும்.]

     புணர்ச்சியின் மகிழ்தல்:

  "கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
  ஒண்தொடி கண்ணேஉள".
                              குறள். 1101

     [ஐம்பொறிகளுக்கும் உரிய ஐம்புல இன்பங்களும் இத் தலைவியிடத்து
 ஒருசேர நுகரக் கிடைப்பனவாய் உள்ளன]

      புகழ்தல்:

 "திரள்மா மரகதச் செய்குன்று காள்என்றும் செவ்வனம்நீர்
 முரண்மா தவங்கள் முயன்றுசெய் தாலும் முளரிமங்கை
 சரண்மாறை வாணன் தமிழ்த்தஞ்சை நாட்டுஎன் தனிஉயிர்க்குஓர்
 அரண்மான் அனையகண் ணாள்கொங்கை போறல் அரிதுஉமக்கே.

                                                      தஞ்சை. 19

 எனவும் வரும்.