[செய்குன்றுகளே! நீங்கள் கடுந்தவம் புரியினும் வாணன் தஞ்சை நாட்டில் என் உயிருக்குப் பாதுகாவலாகிய இம்மான் அனையாளின் கொங்கைகளைப் போன்ற வனப்பினைப் பெறுதல் நுங்கட்கு இயலாது.]
ஏற்புற அணிதலுக்குச் செய்யுள் "தூசும் கலையும்" (அம்பி. 7) என மேல்காட்டியதனையே ஈண்டும் உய்த்து உரைத்துக் கொள்க.
இவற்றுள், இரந்து பின்நிற்றற்கு எண்ணல் முதலாக நீடு நினைந்து இரங்கல் ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பதனுள்ளும், வழிபாடு மறுத்தல் ஒன்று ஒழித்து அல்லாதன வேட்கை உணர்த்தற்கும், வழிபாடு மறுத்தலாகிய ஒன்றும் தலைமகள் மறுத்தற்கும், மறுத்து எதிர்கோடலும் வறிது நகை தோற்றலும் என்னும் இரண்டும் தலைமகள் உடன்பாட்டிற்கும், முறுவல் குறிப்பு உணர்தலும் முயங்குதல் உறுத்தலும் என்னும் இரண்டும் தலைமகன் உடன்பாட்டிற்கும், புணர்ச்சியின் மகிழ்தலும் புகழ்தலும் என்னும் இரண்டும் தலைமகன் கூட்டத்திற்கும் உரியவாம் என்று கொள்க. 123
"முன்னிலை .... .... .... புலவர்"
"மெய்தொட்டுப் ... ... கிளவியும்".
"இரந்துகொண்டு உறுதற்கு எண்ணல் இரந்து
பின்நிலை நிற்றல் முன்னிலை ஆக்கல்
மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்டல்
இடம்பெற்றுத் தழாஅல் வழிபாடு மறுத்தல்
இடையூறு அதனை இயல்புஉறக் கிளத்தல்
நீட்டம்நினைந்து இரங்கல் கூட்டம்மறுத்து எதிர்கொளல்
குறுநகை உணர்தல் உறுநகை வியத்தல் |
|
|
|