296                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     மொழிபெற விரும்பல் முயங்குதல் உறுதல்
     கலவியின் மகிழ்தல் புகழ்தல்எண் ணிரண்டும்
     குலம்மலி தலைவியின் கூட்டத்து விரியே".           மா. அ. 19 

     "கலவி உரைத்தலும் இருவயின் ஒத்தலும்
     கிளவி வேட்டலும் நலம்புனைந்து உரைத்தலும்
     பிரிவுஉணர்த் தல்லொடு பருவரல் அறிதலும்
     அருட்குணம் உரைத்தலும் அணிமை கூறலும்
     ஆடுஇடத்து உய்த்தலும் அருமை அறிதலும்
     பாங்கியை அறிதலும் பகருங் காலை
     நீங்கா இயற்கை நெறிஎன மொழிப".

                  மு. வீ. 8  

123 

வன்புறை வகை  

 496 ஐயம் தீர்த்தல் பிரிவுஅறி வுறுத்தல்என்று
     எய்திய வன்புறை இருவகைத்து ஆகும்.

     நிறுத்த முறையானே (120-ஆம் நூற்பா) வன்புறை
 உணர்த்துவனவற்றுள், இஃது அதன்வகை இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் ஐயம் தீர்த்தலும் பிரிவு அறிவுறுத்தலும் என மேற்கூறிய
 வன்புறை இரண்டு கூற்றினை உடைத்தாம் என்றவாறு.

     வன்புறை-வற்புறுத்தல்.

ஒத்த நூற்பாக்கள் 

முழுதும் - ந. அ. 128 

    "சந்தயம் தவிர்த்தல் தணத்தல்உணர்த் தல்என
     வந்த இரண்டும் வன்புறை வகையே."

மா. அ. 20 

124 

 வன்புறை விரி

 497 அணிந்துழி நாணியது உணர்ந்துதெளி வித்தலும்1
     பெருநயப்பு உரைத்தலும்2 தெய்வத்திறம் பேசலும்3