"அணிந்தமை கூறல் அறநயப்பு உரைத்தல்
பணிந்துஎழு தெய்வப் பான்மை உணர்த்தல்
பிரியேன் என்றல் பிரிந்துவருகு என்றல்
இடம்அணித்து என்றல் இருபதமும் வேண்டல்
உடன்ஏழ் வன்புறைக்கு உரித்துஎனும் விரியே".
அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல்:
"நாவியும் கார்அகில் ஆவியும் தோய்குழல் நாணிஅஞ்சேல்
வாவியும் சோலையும் சூழ்தஞ்சை வாணன்தென் மாறைவயல்
காவியும் சேலும் கமலமும் காட்டும்நின் கண்மலரும்
ஆவியும் போலஇனி யார்அணி யாக அணிந்தனமே"
[புழுகும் அகிற்புகையும் தோய்ந்த குழலை உடையாய்! வாவியும் சோலையும் சூழ்ந்த தஞ்சைவாணனுடைய மாறை நகர் சூழ்ந்த வயலிடத்துள்ள காவியும் கயலும் போன்ற நின் கண்களும் உயிரும் போன்று இனிய தோழியர் அணியுமாறு நினக்கு அணிசெய்துள்ளேன் ஆதலின், நாணம் உற்று அஞ்சாதே]
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயில்இயல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே".
எனவும் வரும்.
இது குறுந்தொகை. (2)
[நறுமணத்தை ஆராய்தலையே வாழ்க்கைத் தொழிலாக உடைய வண்டே! என் நிலத்து வண்டு ஆகையால், என் மாட்டு வாரம் வைத்துக் கூறாது உண்மையைச் சொல்; |
|
|
|