பொருந்திய நட்பினையும், மயில் இயலினையும், செறிஎயிற்றினையும் உடைய இத்தலைவியின் கூந்தலைவிட மணம் கமழும் பூக்களாக நீ அறிந்தன உளவாயின் கூறு.]
தெய்வத்திறம் பேசல்:
"தேவரில் பெற்றநம் செல்வக் கடிவடி வார்திருவே
யாவரில் பெற்றுஇனி யார்சிதைப் பார்இமை யாதமுக்கண்
மூவரில் பெற்றவர் சிற்றம் பலம்அணி மொய்பொழில்வாய்
பூஅரில் பெற்ற குழலிஎன் வாடிப் புலம்புவதே".
[இமையாத முக்கண்களைச் சூரியன் சந்திரன் செந்தீக் கடவுள் இவர்களால் பெற்ற சிற்றம்பலவனின் பொழிற்கண், மணமலர் சூடிய கூந்தலை உடையாய்! முயற்சியும் உளப்பாடும் இன்றித் தேவராலே பெற்ற நம் அழகிய மணத்தை வாய்ப்புப்பெற்றுச் சிதைப்பார் ஒருவரும் இரார்; ஆதலின் நீ வாடித் துன்புறுதல் வேண்டா.]
"சிந்தா மணிதெண் கடல்அமு தம்தில்லை யான்அருளால்
வந்தால் இகழப் படுமே மடமான் விழிமயிலே
அந்தா மரைஅன்னமேநின்னை யான் அகன்று ஆற்றுவனோ
சிந்தா குலம்உற்றுஎன் னோஎன்னை வாட்டம் திருத்துவதே திருக்கோவை. 12
எனவும்,
[மான் விழியை உடைய மயில்போல்வாய்! திருவே! சிந்தாமணியும் அமுதமும் இறைவன் அருளால் கிடைக்கப் பெறின், அவை பெற்றவனால் இகழப்படுமோ? அவற்றை ஒத்த சிறப்புடைய நின்னை யான் பிரிந்து ஆற்றியிரேன். ஆதலின் நீ மனம் மயக்கம் உற்று என்னைவாட்டுவது ஏன்?]
|
|
|
|