300                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

    பிரிந்து வருகு என்றல்:

    தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தம் திங்களின்வாய்ந்து
    அளிவளர் வல்லிஅன் னாய்முன்னி ஆடுபின் யான்அளவா
    ஒளிவளர் தில்லை ஒருவன் கயிலை உகுபெருந்தேன்
    துளிவளர் சாரல் கரந்துஉங் ஙனேவந்து தோன்றுவனே".

திருக்கோவை. 16 

 எனவும்,

     [கால்நிமிர்ந்த பெரிய வில்களும், கொவ்வைக் கனியும் முத்துக்களும்
 சந்திரனில் பெற்று, வண்டு மொய்க்கும் கொடி போல்வாய்! யான்
 கூறுவதனைத் தெளிவாயாக. இனி, முற்பட்டு விளையாடுவாயாக. யான்
 சிற்றம்பலவனின் கயிலைச் சாரலுள் சிறிதுபோது மறைந்து இருந்து
 மீண்டும் உவ்விடத்தே வந்து தோன்றுவேன்.]

     இடம் அணித்து என்றல்;

   "வருங்குன்றம் ஒன்றுஉரித் தோன்தில்லை அம்பல வன்மலையத்து
    இருங்குன்ற வாணர் இளங்கொடி யேஇடர் எய்தல்எம்மூர்ப்
    பருங்குன்ற மாளிகை நுண்கள பத்துஒளி பாயநும்மூர்க்
    கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் கனங்குழையே".

திருக்கோவை. 15 

 எனவும் வரும்.

     [மலைபோன்ற யானையை உரித்த தில்லையான் மலைய மலைக்குறவர்
 பயந்த இளங்கொடியே! வருந்தாதே; எம் ஊரின் பெரிய மாளிகைகளில்
 தீட்டிய சாந்தின் ஒளி பவுதலால், உம் ஊர்க்கண் உள்ள கரியகுன்றம்
 வெள்ளைச் சட்டை அணிந்தது போலக் காணப்படும்.]

     இவற்றுள், முன்னைய மூன்றும் ஐயம் தீர்த்தற்கும், ஏனைய பிரிவு
 அறிவுறுத்தற்கும் உரிய எனக்கொள்க.

     "மடன் அறத்தெரிந்த" என்ற மிகையானே, தெய்வத்திறம்
 பேசியபின்னர்ப் பருவரல் உணர்தலும் அதன்பின்னர்ப்