302                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இன்றியமையாமை எடுத்து உரைத்தல்:

 "நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்
 வாங்கிருந் தெண்கடல் வையமும் எய்தினும் யான்மறவேன்
 தீங்கரும் பும்அமிர் தும்செழுந் தேனும் பொதிந்து செப்பும்
 கோங்குஅரும் பும்தொலைத்துஎன்னையும் ஆட்கொண்டகொங்கைகளே

திருக்கோவை. 46 

 எனவும்,

     [இன்றியமையாமை எடுத்துஉரைத்தல் - தலைவி தனக்கு என்றும்
 நீங்கத்தகாத தேவையுடையவள் என்பதைத் தலைவன் கூறுதல்.

     சிவபெருமானுக்கு உரிமையான தேவர்உலகமும் இவ்வுலகமும்
 கிடைப்பதாயினும் கரும்பும் அமிர்தும் தேனும் பொதிந்து, சிமிழும் கோங்கு
 அரும்புமாகிய இவற்றை ஒத்த வடிவினவாய் என்னைத் தம் வசப்படுத்திய
 இத்தலைவியின் கொங்கைகளை மறவேன்.]

     தீராத் தேற்றம்:

    "மெல்லியல் அரிவைநின் நல்அகம் புலம்ப
     நின்துறந்து அமைகுவென் ஆயின் என்துறந்து
     இரவலர் வாரா வைகல்
     பலவா குகயான் செலவுஉறு தகவே".

 எனவும் வரும். இது குறுந்தொகை.(137)  

     [தீராத்தோற்றம் - எஞ்ஞான்றும் பிரியாமைக்குக் காரணம் ஆகிய
 சூளுறுதல்.

     தலைவியே! நின்மனம் வருந்த நின்னைப் பிரிந்து யான் கவலையற்று
 இருப்பின், என் வாழ்க்கையில் என்னை நீத்து இரவலர்கள்
 என்வீட்டிற்கு வாராத நாள்கள் பலவாகுக.]

125