அகத்திணையியல்-நூற்பா-126 303
தெளிவு
498 தலைவன் மாற்றம் தலைவி தேற்றம் தெளிவாம் என்ப தெளிந்திசி னோரே.
இது நிறுத்தமுறையானே (120) தெளிவிற்கு வகையும் விரியும் இன்மையின், அதன் இலக்கணம் கூறுகின்றது.
இ-ள் தலைவன் சொல்லைத் தலைமகள் தெளிதலைத் தெளிவு என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
தெளிவுக்குச் செய்யுள்:
"எத்தும் தமதுஉரை தேறிநின் றேனைஇங் கேதனியே வைத்துஅங்கு அகன்று மறந்துஉரை யார்வறி யோர்கவர முத்தும் துகிரும் இரங்கும் தரங்கம் முகந்துஎறிந்து தத்தும் புனல்வையை சூழ்தஞ்சை வாணன் தமிழ்வெற்பரே".
தஞ்சை 26
126
எனவரும்.
[ஏழைகள் கொள்ளுமாறு முத்துக்களையும் பவளத்துண்டுகளையும் அலைகள் வாரி வீசக் கரை புரண்டோடும் வைகையை சூழ்ந்த தஞ்சை வாணனது மாறை மலைத்தலைவர், அவர் சொற்களை நம்பியே உயிர்வாழும் என்னை இங்கே தனியே துன்புற விடுத்துத் தாம் தமது ஊரில் என்னை மறந்து தங்கி இரார்.]
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - ந. அ. 130
"இறைவன் கூறுதல் இறைவி தேறுதல் அறைவர் தெளிவுஎன்று அறிவுடை யோரே".
மா. அ. 22
பிரிவுழி மகிழ்ச்சியின் விரி
499 செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லலும் பாகனொடு சொல்லலும் இரண்டும் பிரிவுழி மகிழ்ச்சியின் விரிஎனக் கொளவே.