304                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     இது நிறுத்த முறையானே, பிரிவுழி மகிழ்ச்சிக்கு வகை இன்மையின்,
 அதன்விரி இத்துணைத்து என்கின்றது,

     இ-ள் அவ்வாறு அவ்விடத்து நீங்கித் தலைமகள் தன்னைக்
 காணாமல் தான் அவளைக் காண்பதோர் அணிமைக்கண் நின்ற
 தலைமகன், புணர்ச்சிக் களத்து நின்றும் போகா நின்ற தலைமகளது
 செலவு கண்டு தன்நெஞ்சொடு கூறலும், பாகனொடு கூறலும் ஆகிய
 இரண்டும் பிரிவுழி மகிழ்ச்சியின் விரியாம் எனக்கொள்க என்றவாறு.

விளக்கம் 

     [இதனைப் "பெற்றவழி மகிழ்ச்சியும்" தொ. பொ. 102 என்னும்
 தொல்காப்பியம்.

ஒத்த நூற்பாக்கள் 

     முழுதும் -                                        ந. அ. 131 

    "வரிவளை செலவினை மனத்தொடு கூறலும்
     பரிவுடை மான்தேர்ப் பாகனொடு கூறலும்
     பிரிவுழி மகிழ்ச்சியின் விரிஎனப் படுமே".

மா. அ. 23] 

     செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்:

    "காணா மரபினது உயிர்என மொழிவோர்
     நாணிலர் மன்ற பொய்மொழிந் தனரே
     யாஅம் கண்டும்எம் அரும்பெறல் உயிரே
     சொல்லும் ஆடும் மென்மெல இயலும்
     கணைக்கால் நுணுகிய நுசுப்பின்
     மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே".

 எனவும்,

     ["உயிர் காட்சி அளவைத்து அன்று" என்று கூறுவார் தவறு கூறுதற்கண்
 நாணமற்றவர் ஆவர். அவர் பொய்யே கூறுகின்றனர். யாம் எம் அரிய
 உயிரைக் கண்ணால் காணும்