அகத்திணையியல்-நூற்பா-127,128                           305


 

 வாய்ப்பினம். அது எம்மோடு பேசும்; மென்மையாக நடக்கும், நுண்ணிய
 இடையினையும், குளிர்ந்து நோக்கும் பார்வையினையும் பெருந்
 தோள்களையும் உடையது அது]

     பாகனொடு சொல்லல்:

 "தென்பார்த் திலகம்அன் னான்தஞ்சை வாணன்தென் மாறைமுந்நீர்
  வன்பால் திரள்முத்தம் வண்டலின் மேல்வரும் ஏதம்அஞ்சி
  முன்பார்த்துஎன் நெஞ்சம் வழிபார்த்து ஒதுங்க முறைமுறைதன்
  பின்பார்த்து ஒதுங்குதல் காண்வல வாஒரு பெண்அணங்கே."

தஞ்சை. 28 

 எனவரும்.

     [பாகனே! ஒரு பெண் அணங்கு தஞ்சை வாணன் மாறையிலே
 கடல்அலை தன் வண்டலை அழித்து விடுமோ என்று முன் பார்த்து,
 பின்னே தொடர்ந்துவரும் என் நெஞ்சம் வரும் வழியைப் பின்
 பார்த்துச் செல்லுதலைக் காண்.]

127 

     பிரிவுழிக் கலங்கலின் வகை

 500 மருள்உற்று உரைத்தல் தெருள்உற்று உரைத்தல்என்று
     இருவகைத்து ஆகும் பிரிவுழிக் கலங்கல்.

     இது பிரிவுழிக் கலங்கலின் வகை இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் மருள்உற்று உரைத்தலும் தெருள்உற்று உரைத்தலும் என
 இரண்டு வகையினை உடைத்தாம் பிரிவுழிக் கலங்கல் என்றவாறு.

128 

 விளக்கம் 

     மருள்உற்று உரைத்தல் - மனம் மயக்கம்உற்றுக் கூறுதல்; தெருள்உற்று
 உரைத்தல் - மனத்தில் தெளிவுபெற்றுக் கூறுதல். இதனைப்
 "பிரிந்தவழிக் கலங்கல்" (தொல். பொ. 102) என்னும் தொல்காப்பியம்.

      39