306                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

ஒத்த நூற்பாக்கள் 

முழுதும் - ந. அ. 132 

    "மருள்பெற நிகழ்த்தலும் தெருள்பெற நிகழ்த்தலும்
     பிரிவுழிக் கலங்கல் வகைஎனப் படுமே".

மா. அ. 24 

128 

பிரிவுழிக் கலங்கலின் விரி  

 501 ஆய வெள்ளம் வழிபடக் கண்டுஇது
     மாயமோ என்றலும்1 வாயில்பெற்று உய்தலும்2
     பண்புபா ராட்டலும்3 பயந்தோர்ப் பழிச்சலும்4
     கண்படை பெறாது கங்குல்நோ தலும்5 எனும்
     ஐந்தும் பிரிவுழிக் கலங்கல்விரி ஆகும்.

     இது பிரிவுழிக் கலங்கலின்விரி இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் தலைமகளை ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோ
 என்றல் முதலாகக் கண்படை பெறாது கங்குல் நோதல் ஈறாகச்
 சொல்லப்பட்ட ஐந்தும் பிரிவுழிக் கலங்கலின் விரியாம் என்றவாறு.

விளக்கம் 

 1 [ஆயவெள்ளம் வழிபடக் கண்டு இது மாயமோ என்றல் பாங்கியர்
   கூட்டம் தலைவிக்கு வழிபாடு செய்ய அதனைத் தலைவன் கண்டு
   "இவ்வளவு பாதுகாப்பில் இருக்கும் இவளை நான் அடைந்து
   இன்புற்றது பொய்யோ" என்று எண்ணுதல்.

 2 தலைவியை பெறுதற்குத் தூது இன்னாள் என்பதை அறிந்து தலைவன்
   ஆற்றாமை நீங்குதல்.

 3 தலைவியின் அழகைத் தலைவன் மிகப் புகழுதல்.

 4 தலைவியின் தாய்தந்தையர்களைத் தலைவன் வாழ்த்தல்.

 5 தலைவியைப் பிரிந்த தலைவன் துயில் பெறாமல் இராப்பொழுதில்
   வருந்திக் கூறுதல்.