"புனம்மயில் சாயலை ஆயம் போற்றலின்
கனவுகொல் என்றலும் வாயில் காண்டலும்
பண்புபா ராட்டலும் பயந்தோர்ப் பழிச்சலும்
காதுஅடர் கண்படை பெறாது கங்குல்
நோதலும் பிரிவுழிக் கலங்கல்விரி நோக்கம்"
ஆயவெள்ளம் வழிபடக் கண்டு இது மாயமோ என்றல்:
"புணர்ப்போன்நிலனும்விசும்பும் பொருப்பும் தண்பூங்கழலின்
துணர்ப்போது எனக்குஅணிஆக்கும் தொல்லோன் தில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போது அணிகுழல் ஏழைதன்நீர்மை இந்நீர்மை என்றால்
புணர்ப்போகனவோபிறிதோ அறியேன்புகுந்ததுவே".
[மண்ணும் விண்ணும் மலைகளும் படைக்கும் பெரியோன் ஆயினும் தன் திருவடிகளை என் முடிமணியாக்கும் எளிமையுடைய பெருமானது தில்லைப் பொழிலில், இத் தலைவியின் பெருமை இத்தன்மைத்தாயின், இவளை யான்பெற்றது மாயமோ! கனவோ! இரண்டுமன்றி வேறொன்றோ! இன்னது என்று அறியேன்.]
"உயிர்ஒன்று உளமும்ஒன்று ஒன்றே சிறப்புஇவட்கு என்னொடுஎன்னப்
பயில்கின்ற சென்று செவியுற நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிர்ஒன்று முப்புரம் செற்றவன் தில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்தன் அருள்எனல் ஆகும் பணிமொழிக்கே"
[திரிபுரங்களை அழித்த தில்லைக்கூத்தன் அருளேவடிவாக வந்த தலைவியின் காதளவும் நீண்ட படைக்கண்கள், தலைவியாகிய தன்னோடு தோழியாகிய அவளுக்கு உயிரும் ஒன்று, மனமும் ஒன்று, இருமுது குரவரால் செய்யப்படும் சிறப்பும் ஒன்று என்பதைத் தெரிவிக்கின்றன.]
|
|
|
|