அகத்திணையியல்-நூற்பா-129                             309


 

     [மயில்சாயலாளுடன் நீங்கிய என்துயிலை இன்னும் மீளப் பெற்றிலேன்.
 அக்குயில்மொழியாளின் கூந்தல் போன்று இருண்டு, அவள்
 வேற்கண்போலத் துன்பம் செய்து, இராப்பொழுது நீண்டு
 கொண்டிருக்கின்றது.]

     இவற்றுள், ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோ என்றல்
 மருள்உற்று உரைத்தற்கும், ஏனைய நான்கும் தெருள் உற்று உரைத்தற்கும
 உரிய. இனி ஒன்றென முடித்தலான், பிரிந்துழிக் கலங்கி நெஞ்சொடு கூறலும்  வரப்பெறும். அதற்குச் செய்யுள்:

    "இல்லோன் இன்பம் காமுற் றாஅங்கு,
     அரிதுவேட் டனையே; நெஞ்சே! காதலி
     நல்லள் ஆகுதல் அறிந்துஆங்கு
     அரியள் ஆகுதல் அறியா தோயே".                   குறுந்-120


 

 எனவரும்.

     [வறியவன் இன்பத்தை விரும்பி வாடுவதுபோல நம் தகுதிக்கு அரியது
 ஒன்றை விரும்பும் நெஞ்சே! நம் காதலி நல்லாள் என்பதை அறிந்துள்ள நீ
 அவள் நமக்குக் கிடைத்தற்கு அரியவள் என்பதனை அறியாது
 இருக்கின்றனையே!]

                                                            129

இடந்தலைப்பாட்டின் வகை

 502 தெய்வம் தெளிதல் கூடல் விடுத்தல்என்று
     இவ்வோர் மூவகைத்து இடந்தலைப் பாடே.
           

     இது நிறுத்தமுறையானே இடந்தலைப்பாட்டின் வகை இத்துணைத்து
 என்கின்றது.

     இ-ள் தெய்வம் தெளிதலும் கூடலும் விடுத்தலும் என
 இடந்தலைப்பாடு மூவகையினை  உடைத்து என்றவாறு.

                                                            130