310                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 


 விளக்கம்

     இடந்தலைப்பாடு - இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த இடத்தைத் தலைவன்
 அடைதல்.

     தெய்வம் தெளிதல் - இதற்கு முன் தலைவியைத் தானே கூட்டுவித்த
 தெய்வம் மீண்டும் கூட்டுவிக்கும் என்று மனம் தெளிதல்.

ஒத்த நூற்பாக்கள்

     "பாங்கிலன் தமியோள் இடந்தலைப் படலும்".      இறை. அக. 3
 

     முழுதும். -                                        ந. அ. 134
 

     "முயற்சிஇல் தெய்வம் தெளிதல் முயங்குதல்
     இயங்குதல் எனமூ வகைத்துஇடந் தலையே"
         மா. அ. 26
 

     "பொழிலிடைச் சேறல் இடந்தலைச் சொன்ன
     வழியொடு கூட்டி வகுத்திசி னோரே".
           மு. வீ. கள. 13

                                                            130

இடந்தலைப்பாட்டின் விரி

     

 503 தந்த தெய்வம் தரும்எனச் சேறலும்1
     முந்துஉறக் காண்டலும்2 முயங்கலும்3 புகழ்தலும்4
     உடன்புணர் ஆயத்து உய்த்தலும்5 எனஐந்து
     இடந்தலைப்பாட்டின்இலக்கணவிரியே".

     இஃது இடந்தலைப்பாட்டின் விரி இத்துணைப் பகுதித்து என்கின்றது.

     இ-ள் தந்த தெய்வம் தரும் எனச் சேறல் முதலாக ஆயத்து உய்த்தல்
 ஈறாக இடந்தலைப்பாட்டின் இலக்கணவிரி ஐந்தாம் என்றவாறு.